Update : துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளம் பெண் பலி

 

கொழும்பு – தெமட்டகொட, சஹஸ்புர பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் போதைப்பொருள் சோதனையின் போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் ஒருவரை பிடிக்கச் சென்ற போது இரண்டு இராணுவ சிப்பாய்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணமாகவே இந்த பெண் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் எனினும் அவர் உயிரிழந்தார்.

குறித்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.