உள்ளுர் உலர் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
இந்த வருடத்தில் உள்ளுர் உலர் மிளகாய் உற்பத்தியை 25% அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் 150 ஏக்கர் நிலப்பரப்பில் மிளகாய் பயிரிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த நோக்கத்திற்காக, விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம் ஒரு விவசாயிக்கு திரும்பப் பெற முடியாத தொகையாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கியுள்ளது.