இலங்கை ஜி20 கட்டமைப்பின் கீழ் கடன் பெறவுள்ளது

இந்தியா, சீனா  மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட 7 நாடுகள் புதிய அரச கடன் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக மெய்நிகர் கூட்டம் ஒன்றில் பங்கேற்க தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும்  பெப்ரவரி 17 ஆம்  திகதி வெள்ளிக்கிழமை இதற்கான மெய்நிகர் கூட்டம் நடைபெறவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது .

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து இந்த கூட்டத்தினை நடத்தவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் அறிவித்துள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை, சம்பியா,மற்றும் கானா ஆகிய நாடுகள்  ஜி20  கட்டமைப்பின் கீழ் கடன் கோரியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.