
பேஸ்புக் களியாட்டத்தில் போதை பொருள் பாவனை : 32 பேர் கைது
பேஸ்புக் ஊடாக பியகம – பண்டாரவத்தை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா,ஐஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, மருதானை, கிராண்ட்பாஸ் மற்றும் பேலியகொடை ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 முதல் 27 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
