துருக்கி – சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது

 

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த  நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் சிரியாவில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பலியானோர் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.