
அமெரிக்க வான்பரப்பில் மற்றுமொரு மர்ம பொருள்
அமெரிக்காவின் வான்பரப்பில் பறந்த மற்றுமொரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கனடாவின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்கா – கனடா வான்வெளியை பாதுகாக்கும் இரு நாட்டு கூட்டுப் படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எஃப் – 22 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கு இடையில் தொலைப்பேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள லேக் ஹரான் பகுதியில் பறந்த மற்றுமொரு மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் அண்மையில் சுட்டு வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, ஒரே மாதத்தில் 4வது முறையாக அமெரிக்க வான்பரப்பில் பறப்பில் வைத்து மர்ம பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
