உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : 36,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அனுப்பப்பட்ட சுமார் 36,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை தபால் அலுவலகத்திற்கு விநியோகிக்கும் பணி பெப்ரவரி 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.