
துருக்கி மற்றும் சிரியா பலி எண்ணிக்கை 23,700 ஆக உயர்வு
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,700ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், நேற்று வெள்ளிக்கிழமை இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 நாட்களே ஆன சிசுவும் அதன் தாயும் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகள் விரைவாகப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று துருக்கி ஜனாதிபதி ரசேப் தயிப் எர்டோகன் அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், கடும் குளிரான காலநிலையினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்கள் வீடுகளை இழந்து உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
