இலங்கை : வெல்லவாய – புத்தல பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய – புத்தல நகரை அண்மித்த பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.48 மணியளவில் நாட்டின் அனைத்து நில அதிர்வு அளவீட்டு மையங்களிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, புத்தல-பல்வத்த பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதுடன், அது ரிக்டர் அளவுகோலில் 3 மற்றும் 2.4 ஆக பதிவாகியுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க