இ.போ.ச பேருந்து விபத்து : 20 பேர் காயம்

இரத்தினபுரியில் இருந்து பலபத்தல நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து ஒன்று இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இரத்தினபுரி – பாலபத்தல வீதியில் இந்துவ – மஹவாங்குவாவிற்கு அருகில் குறித்த பேருந்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கிலிமெல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க