துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியது

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில், துருக்கி அதிக உயிர்ச் சேதத்தை சந்தித்துள்ளது மற்றும் குறைந்தது 17,674 பேர் இறந்துள்ளனர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தம் இடம்பெற்று 100 மணித்தியாலங்களுக்கு மேலாகியும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, துருக்கிக்கு 1.78 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கி உறுதியளித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க