
ஏறாவூரில் இருந்து மீன் ஏற்ற சென்ற வாகனம் விபத்து : ஒருவர் பலி
ஏறாவூரில் இருந்து மன்னாருக்கு மீன் ஏற்ற சென்ற வாகனம் வெலிக்கந்தை செவனப்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த வாகனத்தில் வாகன உதவியாளராக சென்ற ஏறாவூர் ஆலயடி வீதியை சேர்ந்த அப்துல் சமட் றாசிக் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
