பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மனு இன்று விசாரணைக்கு

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளது.

மின்வெட்டைத் தடுக்க இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, 12வது நிலக்கரி கப்பல் இலங்கைக்கு வந்துள்ள போதிலும், கட்டணம் செலுத்தப்படாமையால், அதனை இறக்க முடியவில்லை என மின்சார பொறியியலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் காரணமாக காலதாமதமாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக நேற்று வியாழக்கிழமைகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.