உணவுகளுக்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை
எரிபொருளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்தை போன்று அரசாங்கம் உணவு பொருட்களுக்கும் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென உணவக உரிமையாளர்களின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.