
பென்டகனுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா மறுப்பு
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துறை அல்லது பென்டகனுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அரசு மறுத்துவிட்டது.
சந்தேகத்திற்கிடமான சீன பலூனை சுட்டு வீழ்த்தியதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் விடுத்த கோரிக்கையை சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனின் சிதைவுகளை கப்பல் மூலம் இழுத்துச் செல்லும் புகைப்படங்களை அமெரிக்க ராணுவம் தனது முகநூல் மூலம் வெளியிட்டுள்ளது.
இந்த பலூன் உண்மையில் உளவு பார்க்கும் சாதனமா என்பதை சரிபார்க்க அமெரிக்கா விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.