மசாலா பொருட்கள் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு அதிக வருமானம்

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, மசாலாப் பொருட்கள் மற்றும் அது தொடர்பான பெறுமதி சேர்ப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கை கடந்த வருடம் 455 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இலவங்கப்பட்டை, மிளகு, கராம்பு, ஜாதிக்காய்,  கோஃபி (Coffee) உள்ளிட்ட 58,192 மெட்ரிக் தொன் மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடம் கறுவாவினால் அதிகளவு ஏற்றுமதி வருமானம் பெறப்பட்டதுடன் அதன் பெறுமதி 217 மில்லியன் டொலர்களாகும்.