மட்டு.காத்தான்குடியை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழப்பு : செல்ஃபியால் நேர்ந்த விபரீதம்

செல்ஃபி எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்து தந்தை ஒருவரும் அவரது 12 வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பொலன்னறுவை. புளஸ்திபுர, கும்புக்கனறுவ ஓயாவில் இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது..

கும்புக்கனறுவ ஓயாவை பார்வையிடச் சென்ற 46 வயதுடைய தந்தை அவரது மகளும் கல்வல சந்தி பகுதிக்கு அருகில் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன தந்தையையும் மகளையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் உட்பட்ட குழு, நீரில் மூழ்கிய தந்தையும் மகளும்  ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பரணகம பிரதேசத்தில் பின்னர் உடலங்களாக மீட்டனர்.

உயிரிழந்தவர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள், எனவும் தந்தை ஓங்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.