தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்
தலவாக்கலை தோட்டத்தின் ஒட்லான்ட் பிரிவில் உள்ள தோட்ட வீடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட இத்தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, மற்ற வீடுகளுக்கும் பரவியதால், சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் 12 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர், உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தை பொங்கல் கொண்டாட்டம் நேற்று இடம்பெற்றதாகவும், இதன் காரணமாக தோட்டத்தில் தை பொங்கல் கொண்டாட்டத்தில் பலர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.