
இலங்கை – மாலைதீவு இடையே கலாச்சார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும், மாலைதீவுக் குடியரசுக்கும் இடையிலான கலாச்சார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்காக தயாரிக்கப்பட்ட ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் வெளிவிவகார அமைச்சின் இணக்கமும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
