ஏரியில் நீராடச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

தந்திரிமலை – நில்மல்கொட ஏரியில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணை முதலை பிடித்து இழுக்கும் போது பிரதேசவாசிகள் அவரை மீட்டு தந்திரிமலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தந்திரிமலை – பூகொட பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.