
வர்த்தகர் கொலை வழக்கு : சந்தேகநபர்கள் தடுப்பு காவலில் விசாரணை
பத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பெலவத்தை தொழிலதிபரின் மரணம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தம்பதியினரான பிரதான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கந்தானை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்ய்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரையும் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read more : வர்த்தகர் கொலை வழக்கு : வெளியாகிய தகவல்
