
தெற்கு துருக்கியில் நிலநடுக்கம்
தெற்கு துருக்கியில் உள்ள காசிண்டெப் அருகே ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட அதிர்ச்சியை சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், லெபனான், சிரியா உள்ளிட்ட பல நாடுகள் உணர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
18 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சில நிமிடங்களுக்குப் பிறகு, மற்றொரு நடுக்கம் பதிவு செய்யப்பட்டது, அது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக இருந்தது.
பூமிக்குள் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இது நிகழ்ந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
