உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கைது

வனவள திணைக்கள அதிகாரிகளை தாக்கி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் வல்லபட்டை வெட்டிய குழுவினர் தொடர்பில் விசாரணை நடத்த வந்த போது, ​​மாதம்பே – பனிரெண்டாவ காப்புக்காட்டுக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர் மாதம்பை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் பிங்கிரிய உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார்.