தனது குழந்தைக்காக பூக்கள் வாங்கிகொண்டு சென்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
ஹொரண பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLINTEC) விஞ்ஞானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சொகுசு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹொரண கோனாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான விஞ்ஞானி கார் வீதித் தடையின் கொன்கிரீட் கம்பத்தில் மோதியதில் அவரது கார் கவிழ்ந்தது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்தவுடன் காரின் ஏர் பலூன் செயல்பட்டதாகவும், காரிலிருந்து வீசப்பட்ட பிளாஸ்டிக் துண்டு அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது குழந்தைக்கு ஞானஸ்தானம் செய்ய பூக்களைக் வாங்கிகொண்டு சென்றபோதே விபத்து ஏற்பட்டது.
மொரகஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்