மகள் எடுத்த விபரீத முடிவு : தாயார் பொலிஸில் முறைப்பாடு

-பதுளை நிருபர்-

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெல்சிரி காடன் பெல்காத்தன்ன பகுதியில், தனது மகள் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக தாய் ஒருவரால் பசறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

எனினும் பிரேதம் தற்போது மீட்கப்படாமல் அவ்விடத்திலேயே காணப்படுவதோடு, இதுகொலையா? தற்கொலையா? என பசறை பொலிஸார் பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.