சுதந்திர சத்தியாக்கிரக சம்பவம் : கைது செய்யப்பட்ட 03 பேர் விளக்கமறியலில்

சுதந்திர சத்தியாக்கிரகம் என்ற பெயரில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து மருதானை – எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக நடத்திய சத்தியாக்கிரக சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 03 பேர் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 06 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களில் 03 சத்தியாக்கிரக செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.

அவர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொருவரையும் சொந்த பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டம் பொலிஸாரினால் தண்ணீர் தாக்குதல் மூலம் கலைக்கப்பட்டது.