ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பத்து இலட்சம் பேரின் வேலை

நாட்டில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் நெருக்கடி காரணமாக கொத்தனார் உட்பட சுமார் பத்து இலட்சம் பேரின் வேலைகள் ஆபத்தில் உள்ளதாக தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்கள் மட்டுப்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணம் என அதன் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.