காரில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு
ஹொரணை – கொழும்பு வீதியில் கோணபொல – கும்புக பகுதியில் காரில் பயணித்த நபர் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த காரில் பயணித்த நபர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரஆலை ஒன்றின் உரிமையாளரான ஹொரேதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.