இலங்கை தொடர்பில் விக்டோரியா நியூலேண்டின் அறிக்கையை நிராகரித்த சீனா

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நியூலேண்ட், இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அதை நிராகரிப்பதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்இ நாட்டின் கடனை மறுசீரமைக்க சீனாவிடம் இருந்து பெறப்பட்ட திட்டங்கள் போதுமானதாக இல்லை என்று விக்டோரியா நியூலேண்ட் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச பங்களிப்பை சீனா வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனின் ஸ்திரத்தன்மைக்காக வழங்கப்படக்கூடிய சலுகையை சீன எக்சிம் வங்கி எழுத்துமூலமாகத் தெரிவித்துள்ளதோடு, இலங்கை அரசும் நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க சீனா ஆர்வமாக உள்ளதாகவும்,  அமெரிக்க பிரதிநிதியின் கூற்றுப்படி இலங்கை புறக்கணிக்கப்படவில்லை, எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.