சுகாதார அமைச்சின் கவனயீனம் காரணமாக சிரமத்திற்குள்ளாகியுள்ள புற்றுநோய் நோயாளர்கள்
குளிரூட்டும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் புற்றுநோய் நோயாளிகளின் கதிர்வீச்சு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரம் (Linear Accelerator) இதுவரை சீர் செய்யப்படாததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த நவம்பர் 14ம் திகதி முதல் செயல்படாமல் உள்ள இந்த இயந்திரம் நாளொன்றுக்கு சுமார் 80 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டது.
எனினும், அதன் செயலற்ற தன்மை காரணமாக, நோயாளிகள் தற்போது ‘கோபோட் 60’ கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களைப் பயன்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாகவும், அவை மிகவும் குறைந்த துல்லியமான சிகிச்சை இயந்திரங்களாகவும் உள்ளன.
குறித்த லீனியர் ஆக்சிலரேட்டர் (Linear Accelerator) இயந்திரத்தின் குளிரூட்டும் முறைமையை பராமரிப்பதற்கான எந்தவொரு அமைப்பையும் சுகாதார அமைச்சு தயார் செய்யாமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.