சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஒத்திகை

நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஒத்திகை நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, இன்று காலை 5 மணி முதல் நண்பகல் வரை ஒத்திகையின் போது காலி முகத்துவாரம் மற்றும் கொழும்பில் உள்ள பல வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.