நீச்சல் தடாகத்தில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்பு

பெலவத்தையில் அமைந்துள்ள கட்டிடமொன்றின் நீச்சல் தடாகத்தில் வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 49 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

தலங்கம பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அவரது 3 மாடி கட்டிடத்தின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஜனவரி 30 ஆம் திகதி முதல் அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.