தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பில் விடுதலை
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.