சர்வதேச கடலில் இரண்டு கப்பல் பணியாளர்கள் உயிரிழப்பு
எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பலில் பணிபுரிந்த இரண்டு கப்பல் பணியாளர்கள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் 41 மற்றும் 53 வயதுடைய உக்ரைன் பிரஜைகள் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் காலி துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது குறித்த கப்பல் காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை காலி நீதவானுக்கு அறிக்கையிடவுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்