இந்திய தொழில்முனைவோர் குழு இலங்கையில் மத சுற்றுலாவை மேம்படுத்த விருப்பம்
இந்திய தொழில்முனைவோர் குழு இலங்கையில் மத சுற்றுலாவை மேம்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இந்த இந்திய தொழில் முயற்சியாளர்களுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பொது நிர்வாக அமைச்சில் இடம்பெற்றது.
ராவண எலியா, நுவரெலியா, சீதா எலியா உள்ளிட்ட ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களிலும், சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்களும் முதலீடு செய்ய இந்திய தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.