ஒளிந்து விளையாடிய சிறுவன் 6 நாட்களின் பின் வேறு நாட்டில் கண்டுபிடிப்பு
ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் ஆறு நாட்களுக்குப் பிறகு வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
15 வயது சிறுவன் ஒருவன் பங்களாதேஷ் நகர் ஒன்றில் ஜனவரி 11 ஆம் திகதியன்று விளையாடிக்கொண்டிருந்தபோது, கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்ட நிலையில் தன்னையறியாது நித்திரையில் ஆழ்ந்துள்ளான்.
எனினும், அவர் இருப்பதை அறியாத பணியாளார்கள்இ குறித்த கொள்கலனை பூட்டி மலேசியாவிற்கு கப்பலில் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அந்த சிறுவன் ஆறு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 17 ஆம் திகதியன்று அன்று மலேசிய அதிகாரிகளால் மலேசியாவின் மேற்கு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தி தெரிவிக்கின்றது.