காணி ஒன்றிலிருந்து தோட்டாக்கள், இரும்பு கைவிலங்குகள் மீட்பு
காலி – அக்மிமன – அமல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த 35 T-56 தோட்டாக்கள் உள்ளிட்ட துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் தமது காணியில் கழிவுநீர் அகற்றும் குழியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
35 T56 தோட்டாக்கள் கூடுதலாக, எம். 16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 8 தோட்டாக்கள், 9 மி.மீ ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்கள், இரும்பு கைவிலங்குகள் மற்றும் சிதைந்த ஆயுதம் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், அவர் அண்மையில் இந்த காணியை கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.