பொலிவூட் நடிகர்களுடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சந்திப்பு

பிரபல பொலிவூட் நடிகர்களான சன்கி பாண்டே மற்றும் சஞ்சய் கபூர் ஆகியோருக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இந்த கலந்துரையாடல்  இடம்பெற்றதாக அமைச்சர் ஹரின் தெரிவிததுள்ளார்.

திரைப்பட தயாரிப்பு தளமாக இலங்கையை மேம்படுத்துவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும், அத்துடன், தொடர்ந்தும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.