ஏ.டி.எம் அட்டை மோசடி: 22 வயதுடைய இளைஞன் கைது
குருநாகல் நகரில் மேற்கொள்ளப்பட்ட ATM அட்டை மோசடி தொடர்பில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொட்டிகாபால பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நேற்று ஞாயிற்றுக்கிழமை 6 வங்கி அட்டைகளுடன் குருநாகலில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி அவர்களின் பின் இலக்கங்களைப் பெற்று வங்கி அட்டைகளை மாற்றிக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இந்த தகவலை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துள்ளார்.
சந்தேக நபரை இன்று திங்கட்கிழமை குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..