எங்களை மடையன் என நினைக்காதீர்கள் – சபையில் உறுப்பினர் ஒருவர் ஆவேசம்

-யாழ் நிருபர்-

எங்களை மடையர் என்று நினைக்காதீர்கள் என யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் முதல்வர் ஆனோல்டை நோக்கி தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாத அமர்வானது திடீரென்று நிறுத்தப்பட்டமை தொடர்பில் இன்று திங்கட்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரனால் சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.

முன்னாள் முதல்வரின் உடல்நிலை சரியின்மையினால் குறித்த கூட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

அவ்வாறு முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை எனில் வேறு ஒருவர் சபையினை தலைமை தாங்கி நடாத்தியிருக்க முடியும் எனவே டிசம்பர் மாதம் அமர்வு நடத்தப்படாமைக்குரிய காரணம் நமக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் எனகேள்வி எழுப்பினர்.

குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றும் போது,

எங்களை மடையர் என்று நினைக்காதீர்கள், முதல்வர் மாத்திரம் இந்த மாநகர சபையின் உறுப்பினர் அல்ல ஏனைய உறுப்பினர்கள் நாங்கள் இருக்கின்றோம் எங்களை மடையர் என நினைக்காதீர்கள் என முதல்வரை நோக்கி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் அணியினர் சபையின் அமர்வை புறக்கணித்துள்ளனர்.

சபையில் உரையாற்றிய வரதராஜா பார்த்திபன், சட்ட விரோதமாக முதல்வர் தெரிவு இடம் பெற்றுள்ளது எனவே இந்த விடயத்தினை தற்போதுள்ள முதல்வர் கருத்தில் எடுக்க வேண்டும் என தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.