தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம்

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்திற்கு 6% முதல் 36% வரை வரி விதிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை உடனடியாக திரும்பப் பெறக் கோரி கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்பு போராட்ட வாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் சுமார் 30 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாக தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க