ரயிலில் பயணிகள் மீது தீ வைப்பு

இந்தியாவில் ரயிலில் பயணிகள் மீது இனந்தெரியாத ஒருவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம் எழத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது

இதனை கண்டு அச்சமடைந்த நிலையில் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை  ஒரு பெண் உட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் மூவரின் சடலங்களும் ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டன.

மேலும்,  தீயினால் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், ரயிலில் தீ வைத்தவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.