மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு
கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீசிய மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் முறிந்து சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது.
இதனால் வகுப்பறை கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளது. இதேவேளை குறித்த பாடசாலைக்கு முன்பாகவிருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்ததில் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியில் 2ம் கட்டை பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக 4 கடைகளைக் கொண்ட கடைத்தொகுதி ஒன்றின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது, விற்பனை பொருட்கள் மழைக்கு நனைந்துள்ளது.
கால்நடைப்பண்ணை ஒன்றின் கூரைத்தகடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. மரக்கிளையும் முறிவடைந்துள்ளதுடன், அப்பண்ணைக்கான மின் இணைப்புக்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது.