வண்ண மலர்களால் கலைகட்டிய சீசன்

இந்தியாவில் பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரில் இப்போது சுற்றுலா பருவகாலம் கலைக்கட்டியுள்ளது. குறிப்பாகஇ காஷ்மீரின் புகழ்பெற்ற வண்ணமயமான டுலிப் தோட்டத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட வருகின்றனர்.

ஆசியவின் மிகப்பெரிய டுலிப் தோட்டம் ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி நினைவு தோட்டமாகும். இந்தாண்டு மார்ச் 24 ஆம் திகதி அன்று இது பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. பொதுவாக மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் தொடக்கம் வரைஇ டுலிப் மலர்கள் பூக்கத் தொடங்கும். அதனால் இந்த நேரத்தில் வருடம் தோறும் டுலிப் திருவிழா நடைபெறுகிறது.

புகழ்பெற்ற தால் ஏரி அருகே அமைந்துள்ள இந்த தோட்டம் சுமார் 52.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 68 விதங்களில் சுமார் 16 லட்சம் டுலிப் மலர்கள் இங்கு பார்வையாளர்களை கண்களை கவர்கிறது.

பருவகாலம் தொடங்கிய முதல் பத்து நாள்களிலேயே டுலிப் தோட்டத்திற்கு பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக தோட்டத்தின் பொறுப்பாளர் இனாம்-உல்-ரெஹ்மன் தெரிவித்துள்ளார். 10 நாள்களில் சுமார் 1.35 இலட்சம் பேர் தோட்டத்தை வந்து பார்வையிட்டதாக அவர் கூறினார். இந்த பயணிகளில் 70 சதவீதம் வேறு மாநிலம் மற்றும் நாடுகளை சேர்ந்தவர்கள் என்றார்.

ஒரு பருவகாலம் அதிகபட்சமாக 2022ல் 3.60 இலட்சம் பார்வையாளர்கள் வருகை தந்ததே சாதனையாக உள்ளது. இந்தாண்டு இந்த சாதனை எண்ணிக்கை முறியடிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்