அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம்

அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் முறை குறித்து ஆராயப்பட்ட அரசியலமைப்பு சபையின் முதலாவது கூட்டம் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்றது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இன்றைய சந்திப்பில் மேலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாவது அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில், தேர்தல்கள், பொதுச் சேவைகள், தேசிய பொலிஸ், கணக்காய்வு சேவைகள், மனித உரிமைகள், இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை, நிதி, எல்லை நிர்ணயம் மற்றும் தேசிய கொள்முதலுக்கான ஆணைக்குழுக்களுக்கான பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதற்கு இணக்கம் காணப்பட்டது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க