கதிர்காமத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்

கதிர்காமத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்

கதிர்காமம் – வெடிஹிட்டிகந்த (பழைய ஏழுமலை) வீதியில் இன்று சனிகிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் கராத்தே ஆசிரியரான (வயது – 46) பிரதீப் லக்மால் என்ற ‘உடவத்தே மஞ்சு’ என்பவரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது கால்கள் சேதமடைந்துள்ளதாகவும் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்