அமெரிக்காவில் சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அமெரிக்காவில் சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பலத்த புயல் காற்று வீசியதில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதுடன் ஏராளமானோர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னசி, அயோவா, மிசிசிபி உள்ளிட்ட மாகாணங்களில் வருகின்ற 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுயில் வானிலை ஆய்வு மையத்தினால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏராளமான சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதிகளுக்கு மின்சாரம் தடைசெய்யபட்டுள்ளது.2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்