துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

வடக்கு மெக்ஸிகோவின் ஜெரெஸ் நகரில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு கார்களில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், போதைப்பொருள் கடத்தலின் முக்கிய மையமாக அறியப்படும் ஜெரெஸ் நகரில் இருந்து வன்முறைகள் தொடர்ந்து பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.