ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம் – உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம் – உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தப் போரில் நிச்சயம் வெற்றி பெற்று நிலங்களை மீட்டெடுப்போம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இது தொடர்பில் தெரிவிக்கையில் “நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம்.
நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம். உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும் நாடுகள், தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களும், வலுப்படுத்தி வருபவர்களும் ஒன்றிணைவோம்.
உக்ரைன் பயங்கர நாட்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்துள்ளோம்” என தெரிவித்தார்.
மேலும் கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகளை கார்கிவ் பகுதிக்கு மீட்டு வந்துள்ளதுடன்
கெர்சன் நகர், பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தது, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது என தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்