மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி-2023

 

-ஆர்.நிரோசன்-
மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி பெண்கள் தேசிய பாடசாலையின்
2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று சனிக்கிழமை பி.ப 03.00 மணியளவில் கல்லூரியின் அதிபர் எஸ். சாந்தகுமார் தலைமையில் இடம் பெற்றது.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் மற்றும் சிறப்பு அதிதியாக வலையக்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ். ரவிராஜா மற்றும் கௌரவ அதிதியாக கல்லூரியின் முன்னாள் அதிபர் கே. அருமை ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாரதி இல்லம் 599 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், கம்பன் இல்லம் 482 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், இளங்கோ இல்லம் 295 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்தன. இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்களும் பாடசாலையின் பழைய மாணவிகள்,மாணவிகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி-2023 மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி-2023

மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி-2023 மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி-2023 மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி-2023

மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி-2023 மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி-2023

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்